திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..

சுந்தரம்பள்ளி பகுதியில் கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரம்பள்ளி கிராமத்தில் அதிமுக,திமுக,பாஜக கட்சியில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று கந்திலி தெற்கு ஒன்றிய செயளாளர் ஏ.ஜெ.சக்தி முன்னிலையில் வேலூர் தெற்கு மாவட்ட செயளாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். அப்போது அப்பகுதியில் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வில் இரட்டை வேஷம் போடும் மாநில மற்றும் மத்திய அரசை உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகத்தில் நீட் தேர்வால் 13 மாணவர்களின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டியும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயளாளர் ஆனந்தன்,கந்திலி ஒன்றிய பொருளாளர் சங்கர்,திருப்பத்தூர் தொகுதி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் மணி,சுந்தரம்பள்ளி முகாம் பொருப்பாளர்கள் விஜியன், சத்தியராஜ் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடன் இருந்தனர்.


Popular posts
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே... கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இஸ்மாயில் அவர்களின் நினைவு தினம் இன்று.
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image