ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த ஆசிரியராக ராஜாவூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு  மனிதநேய விருது வழங்கிய  மாவட்ட ஆட்சியர்.. திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் உதவும் உள்ளங்கள் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மனிதநேய விருது வழங்கும் விழா திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.‌ இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இந்திரா என்பவருக்கு சிறந்த மனிதநேயர் என்ற‌ விருதினை வழங்கினார். இதில் கல்வி துறை அதிகாரிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள், உதவும் உள்ளங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
இன்றைய ராசிபலன்கள் பற்றி தெரிந்துகொள்ள தமிழ் சுடரில் வரும் ஜோதிட சுடரை பாருங்கள்..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் 150 செடிகள் நடவு மற்றும் குளம் தூர்வாரும் பணியை மேற்கொண்ட நிர்வாகிகள்...
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே. மார்ச் 5..பாஸ்டன் படுகொலை” சம்பவம் நடந்த தினம் இன்று(1770).
Image